2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

குழாய்நீர் விநியோகத்துக்கு வெட்டிய குழியில் வீழ்ந்தவர் படுகாயம்

Thipaan   / 2016 ஜூன் 05 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை கந்தளாய் பகுதியில், குழாய்நீர் விநியோகத்தைப் பெறுவதற்காக வெட்டி வைக்கப்பட்ட குழியில், மோட்டார் சைக்கிள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் தள வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(05) இடம்பெற்ற இவ்விபத்தில், படுகாயமடைந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இபாதத்துள்ளாஹ் (வயது 34) என்பவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

கந்தளாய் பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு குழாய்நீர் விநியோகத்தைப் பெறுவதற்காக குழி தோண்டப்பட்டு, அதற்கு எவ்வித அடையாளமிடாமலும் குழியை மூடி வைக்காமலும் விட்டிருந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் குழி வெட்டிய வீட்டு உரிமையாளரை அழைத்த பொலிஸார், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X