Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம் மூலமாக மாவட்ட மட்டக் கூட்டங்களை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றபோது, 'கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்' என்ற கூட்டத்தொடரை மீண்டும் அமுல்படுத்துமாறு; கோரும் தனிநபர் பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றியபோதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாணசபையின் சகல தரப்பினரதும் பங்குபற்றலுடன் கடந்த ஆட்சிக்காலத்தில் மாவட்டங்கள் தோறும் கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம் என்ற பெயரில் கூட்டங்களை நடத்தியதால் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும்; எதிர்காலத்தில் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளவேண்டிய அவசியமான அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காணக்கூடிய வாய்ப்பு இருந்ததெனவும் மாகாணசபை உறுப்பினர் கூறினார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago