2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண சபையில் வரவு –செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அடுத்த வருடத்துக்கான வரவு -செலவுத்திட்டம் கிழக்கு மாகாண சபையில் இன்று திங்கட்கிழமை அம்மாகாண  முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவு -செலவுத்திட்ட வாக்கெடுப்பு மாகாண சபையில் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டின் வரவு –செலவுத்திட்ட தொகையுடன் ஒப்பிடும்போது, 2016ஆம் ஆண்டின் வரவு -செலவுத்திட்டம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமானதென முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டத்தில் 969 மில்லியன் ரூபாய் விசேட திட்டங்களுக்காக  ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண ஒட்டுமொத்த நிதி 4,732 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இந்த வரவு -செலவுத்திட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிழக்கு மாகாணத்திலுள்ள 355 பட்டதாரிகளை உடனடியாக ஆசிரியப் பணிக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடும் 3,537 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும்; ஏற்பாடும்; உள்ளடக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டின் வரவு -செலவுத்திட்டம் ஒட்டுமொத்தமாக 1,190 மில்லியன் ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திக்கு உதவும் முகமாக 2016ஆம் ஆண்டின் மாகாண சபை வரவு -செலவுத்திட்டத்தை அதிகரிப்பதற்கு உதவியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .