2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான நிதியை அதிகரிக்க தீர்மானம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதியொதுக்கீடு 04 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான வருடாந்த நிதியொதுக்கீடு 03 மில்லியன் ரூபாயாக இருந்தது. இந்த ஒதுக்கீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு  மாகாணசபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை (20) மாலை நடைபெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டு, ஒரு மில்லியன் ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  

மேலும், கிழக்கு மாகாணசபையில் ஊடகவியலாளர்களுக்கான மொழி மாற்றக்கருவி,தொடர்பாடல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்காக 07 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறிருக்க, சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 15 மில்லியன் ரூபாவை கிழக்கு மாகாணசபை ஒதுக்கீடு செய்யவும் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அவசரக் கட்டட நிர்மாண வேலைக்கு தேவையான நிதியை வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .