2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிழக்கு மகாணசபை உறுப்பினர் - கியூப உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

கியூபா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உயர்ஸ்தானிகர் ஜூஆனா எலேனா மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆலோசகர் ராவுல் கேரி ஜாரியோ ஆகியோரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர், கொழும்பில் நேற்று (13) சந்தித்துக்  கலந்துரையாடினார்.

திருகோணலை மாவட்ட அபிவிருத்தி, வேலையற்றோர், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த நிலையில் மீள் குடியேறமுடியாத நிலைமை, வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்றவர்களுக்கான வாழ்வாதார வசதிகள், மீனவர்கள் மற்றும் விவசாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத் தலைவருமான ஆர்.எம்.அன்வர் இதன் போது வலியுறுத்தினார்.

மேலும் அதுவிடயமாக எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை சமர்ப்பித்ததுடன், மாகாண சபை உறுப்பினரின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணத்துக்கு வருகை தருவதாகவும் உயர்ஸ்தானிகர் அதன் போது உறுதியளித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .