2025 மே 15, வியாழக்கிழமை

கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கசாதம் மீட்பு

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கசிப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருளான கசாதம் 2 பரல்கள் , திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு ஆற்றுக்கரைச்சைப் பகுதியில் வைத்து, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், திங்கட்கிழமை (01) மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பரல் ஒன்றிலிருந்து  180 லீற்றர் கசாதமும் மற்றையதிலிருந்து 175 லீற்றர் கசாதமும், கசிப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட  ஏனைய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த தகவலுக்கமைய இவற்றைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  ஜனேஸன், இதனோடு தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளனரெனவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .