Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லைப் புர சிறு கிராமங்களில் உள்ள நன்னி, ஈச்சந்தீவு மற்றும் பூவரசன் தீவு காட்டுப்பகுதிகளில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மூன்று, நேற்று (28) மாலை முற்றுகை இடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது, கசிப்பு உற்பத்தி நிலையங்களை நடத்தி வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கசிப்பு மற்றும் கோடா அடங்கிய 12 பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 5 இலட்சம் பெறுமதியான 540 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலுக்கு அமைய, கிண்ணியா பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹாரின் தலைமையிலான குழு, இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
51 minute ago
2 hours ago