2026 மார்ச் 25, புதன்கிழமை

கஞ்சாவுடன் நடமாடிய நபருக்கு அபராதம்

Gavitha   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

900 மில்லி கிராம்  கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட திருகோணமலை சின்னம்பிள்ளைச் சேனையைச்  சேர்ந்த 41 வயதான நபருக்கு 40 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்து, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார்.

குறித்த நபர், திருகோணமலை, சீனக்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து 900 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .