Gavitha / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை ரொட்டவௌ பகுதியில் ஐந்து கஞ்சா கட்டுகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மீன் வியாபாரியை, எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா நேற்று வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.
50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணைக்கு கையொப்பம் இடுவதற்கு எவரும் முன்வராததன் காரணத்தினாலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரொட்டவௌ பகுதியைச் சேர்ந்த இமாம் அப்துல் ரஹிம் வயது (36) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவௌ பகுதியில், தொட்டுவௌ குளத்தை அண்டிய பகுதியில், ஐந்து கஞ்சா கட்டுகளை வைத்திருந்த போது, அப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மீன் வியாபாரியை வியாழக்கிழமை (21) காலை கைது செய்தனர்.
அவரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, மேற்படி உத்தரவை நீதவான் விடுத்துள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கெதிராக ஏற்கனவே கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இரண்டு வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்கவில்லையென்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
18 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago