Gavitha / 2016 ஜனவரி 24 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில், 1,800 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு, குச்சவெளி நீதவான் நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை (24) உத்தரவிட்டார்.
மேலும் குறித்த நபரை, எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரை, புல்மோட்டை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்த கஞ்சாவையும் கைப்பற்றினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago