Niroshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
தம்வசம் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை திர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் புதன்கிழமை (27) உத்தரவிட்டார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர் பிரதேசத்தில் 1,000 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயது நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் செவ்வாய்க்கிழமை( 26) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை மூதூர் பொலிஸார் புதன்கிழமை (27) மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, குறித்த நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
14 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago