2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சா கலந்த புகையிலைத் தூளை வைத்திருந்த இளைஞர்களுக்கு அபராம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 நவம்பர் 01 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உப்புவெளி பிரதேசத்தில் கஞ்சா கலந்த 30 கிராம் புகையிலைத் தூளை வைத்திருந்த இளைஞனுக்கு ரூ.6,000 அபராதமும் 3.2 கிராம் வைத்திருந்த இளைஞனுக்கு ரூ.4,000 அபராதமும் விதித்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள், ஹாரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 20, 22 வயதுகளையுடைய இளைஞர்களாவர்.

ஹொரவப்பொத்தானையில் இருந்து திருகோணமலை புற நகர் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா தூள் விற்பனை செய்வதற்காக, இளைஞர்கள் இருவர் வந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என, உப்புவெளிப்    பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X