Editorial / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதின் கியாஸ்,ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, டவர் வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவரை, திருகோணமலை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்று(15) கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 28 கிராம் கேரளாக் கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது அவர் பலமுறை தப்பிச்சென்று விட்டார்.நேற்று முன்தினமே தங்களிடம் சிக்கினார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனை தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago