2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி மாடுகளால் தொல்லை

Thipaan   / 2016 ஜூன் 26 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்        

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில், இரவு மற்றும் பகல் நேரங்களில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கந்தளாய் பிரதேச சபையின் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்வாறு கட்டாக் காலியாக, கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரியும் மாடுகளாலும் வீதியின் நடுவே படுத்துறங்கும் மாடுகளினாலும் விபத்துச் சம்பவங்களும் ஏற்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேவேளை, இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைகளையும் நாசம் செய்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் சம்பந்தமாக கந்தளாய் பிரதேச சபையின் செயலாளர் கே.அசங்கவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கந்தளாய் பிரதேசத்தில் பொதுவாகவே, மாடுகளின் தொகை அதிகம். இதனால் வீதிகளில் படுத்துறங்குகின்றன, இவ்விடயம் சம்பந்தமாக முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன  என அவர் தெரிவித்தார்.

இதுபற்றி பொதுமக்களுக்கும், கால்நடைகள் உரிமையாளர்களுக்கும் பகிரங்க எச்சரிக்கை விளம்பரங்களை வெளியிடவுள்ளதாகவும் அவ்விடயம் சாத்தியப்படாத விடத்து கால்நடை உரிமையாளர்களுக்கெதிராக பொலிஸாரின் அனுமதியுடன் சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X