Niroshini / 2015 நவம்பர் 04 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலியாக வீதிகளில் மாடுகளை அலையவிட்ட உரிமையாளருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே நேற்று செவ்வாய்க்கிழமை 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் மாட்டை திரியவிட்ட உரிமையாளருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவளை, நேற்றிரவு வீதியில் கட்டாக்காலியாக மாடுகளை திரியவிட்ட மூன்று மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாட்டு உரிமையாளர்களை எதிர்வரும் 17ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago