2025 மே 15, வியாழக்கிழமை

கட்டாக்காளி மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் இரவு வேளையில் உலாவித் திரிந்த 9 கட்டாக்காளி மாடுகள், நேற்றுப் பிடிக்கப்பட்டு மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மூதூர் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஹில்மி தெரிவித்தார்.

அந்த வகையில், மாடுகள் 7 பிடிக்கப்பட்டதோடு, கன்றுக்குட்டிகள் 2 பிடிக்கப்பட்டன. மாடு ஒன்றுக்கு தலா 1,300 ரூபாயும் கன்றுக்குட்டிஒன்றுக்கு தலா 800 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தோப்பூர் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், மதஸ்தலங்கள், வீதிகள் போன்றவற்றை மாடுகள் அசிங்கப்படுத்துவதோடு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாகப் பிரதான வீதியில் கட்டாக்காளி மாடுகள் படுத்துறங்குவதாகவும் தோப்பூர் வர்த்தக சங்கத்தினாலும் பொது மக்களினாலும் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய, இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மூதூர் பிரதேச சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .