Princiya Dixci / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
மூன்றரை இலட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படும் நபரொருவருக்கு கந்தளாய் நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை (26) 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கந்தளாயைச் சேர்ந்த 39 வயதான ரத்ன பண்டார சூரிய என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒருவரிடமிருந்து கடனாக மூன்றரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்ததனால் பணத்தின் உரிமையாளரின் முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு, கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்தது. குறித்த வழக்கின் சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க, குறித்த பணத்தை செலுத்துமாறும் செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago