2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Editorial   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று மாநகர முதல்வ ர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் இடம்பெற்றது. 

நாளாந்தம் கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் விட்டுச் செல்லும் திண்மக் கழிவுகள் மற்றும் குப்பைகளால், அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசம் மாசுபட்டிருக்கும் நிலையில் அவற்றினை அகற்றும் பொருட்டு, இன்றைய தினம் முதல்வர் ஸகியினால் காத்தான்குடி நகர சபையில் இருந்து கடற்கரை துப்பரவாக்கி இயந்திரம் வரவழைக்கப்பட்டு இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் வாராந்தம் நடைபெறவுள்ள நிலையில், கடற்கரையை பயன்படுத்தும் பொதுமக்கள் அங்கு குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை விட்டுச் செல்ல வேண்டாம் என மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X