Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கடலில் எண்ணெய்க் கசிவை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடரப்பட்டிருந்த இருவருக்கு, 10 இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில், நேற்று முன்தினம் (26) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி, கல்ப் ஏஜென்சி மற்றும் ஈ.எல்.எஸ். கன்றாக்சன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு கம்பெனிகளுக்கு சொந்தமான “பாச்” என்று அழைக்கப்படும் இயந்திரத்திலிருந்து கடலுக்குள் எண்ணைக் கசிவை ஏற்படுத்தியமை தொடர்பில், கடல் வள பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து, திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாடுகள் குறித்து இரு கம்பெனிகளுக்கும் சொந்தமான இருவரையும் திருகோணமலை நீதிமன்றில் முன்னிறுத்திய போது, கடலை மாசுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், 10 இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.
மேலும், இவர்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி, திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago