2025 மே 05, திங்கட்கிழமை

கடலில் தோணி கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்​

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனக்குடா  கடல் பகுதியில் தோணியொன்று, இன்று (08) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைப் பிறப்பிடமாகவும் வெள்ளைமணல், சீனக் குடா எனும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏ.சக்கரியா (வயது 47) எனத் தெரியவருகிறது.

தூண்டில் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற மூவரின் தோணி கவிழ்ந்ததில்  நீச்சல் தெரியாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் நீந்தித் தப்பித்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவருகிறது.

சடலம், கிண்ணியா தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை சீனக்குடாப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X