Janu / 2024 ஜூன் 02 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் , புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
மூதூர் -அக்கரைச்சேனை சேர்ந்த 08 வயதுடைய இர்பான் இபாம் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
வீதியோரத்திலுள்ள களப்புக் கடலில் மூன்று சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர் . அப்போது வீதியால் சென்றவர்கள் சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளதுடன் இரண்டு சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் மற்றயை சிறுவனை காப்பாற்ற முடியாமல் சென்று சிறிது நேரத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிவான் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது .
மேலும் சம்பவம் தொடர்பிரலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தீஷான் அஹமட்

4 hours ago
7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
15 Nov 2025