2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கடும் காற்று; பப்பாசி மரங்கள் சேதம்

Princiya Dixci   / 2021 மே 28 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

வீசிவரும் பலத்தக் காற்றினால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை பகுதியில் உள்ள பப்பாசித் தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் முறிந்து சேதமாகியுள்ளன.

இதனால் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான பப்பாசிகள் கீழே விழுந்துள்ளமையால் பப்பாசிச் செய்கையாளர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

தாம் கடன்பட்டு ,பெரும் கட்டங்களுக்கு மத்தியில் முதலீடுகளை செய்தும், கூலிக்கு பணம் கொடுத்தும் வளர்த்த பப்பாசி மரங்கள் இவ்வாறு காற்றில் முறிந்துள்ளதாக பப்பாசிச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இது விடயத்தில் விவசாயத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தமக்கு நட்டஈட்டையும், ஏதாவது மாற்று வழியையும் செய்துதருமாறு, கடற்கரைச்சேனை பப்பாசிச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X