Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

- நஹீம் முஹம்மட் புஹாரி,எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தி/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணப்படும் கணித பாட ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவிக்கையில், 'இப்பாடசாலையில் ஒரு கணித பாட ஆசிரியர் மட்டுமே உள்ளார். இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்' என்றனர்.
எனவே, இப்பாடசாலைக்கு மேலதிகமாக கணித பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமெனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; அருண சிறிசேன, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளை தொடர்புகொண்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறினார். இருப்பினும், தீர்வு கிடைக்கும்வரை தாங்கள் நகரப்போவதில்லையெனக் கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026