2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கணக்காளருக்கு இடமாற்றம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் கணக்காளராக இதுவரை காலமும் கடமையாற்றிய பி.டபிள்யூ.பாக்யா, நாளை (16) தொடக்கம் கந்தளாய் தள வைத்தியசாலையின்  கணக்காளராக இடமாற்றம் பெறுகின்றார்.

இதனை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராளவின்  தலைமையில், மாவட்டச் செயலகத்தில் இன்று (15) பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

குறிப்பிட்ட சில உத்தியோகத்தர்களது பங்குபற்றலுடன் மாத்திரம் நடைபெற்ற இந்த நிகழ்வில், கணக்காளரின் சேவையைப் பாராட்டி, மாவட்டச் செயலாளரால் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதுடன்,  அவருக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

2013ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, இலங்கை கணக்காளர் சேவையன் மூன்றாம் தர உத்தியோகத்தராக திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இணைந்து இவர்  கடமையாற்றியமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X