2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கணவரை மீட்டுத்தருமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள்

Princiya Dixci   / 2021 மார்ச் 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, பூநகர் - ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த தனது கணவர், இம்மாதம் 09ஆம் திகதி கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்ற நிலையில், 13ஆம் திகதி மாலையிலிருந்து எந்தத் தொடர்புமற்ற நிலையில் உள்ளதாக கண்ணீர் மல்க மனைவி தெரிவித்தார். 

இவ்வாறு காணாமல் போனவர், 6 மற்றும் 1 1/2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான 1991.11.15ஆம் திகதி பிறந்த துறைசிங்கம் சஹிந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் ஆவார்.

இவர், குடும்ப கஷ்ட நிலமை காரணமாக கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு, குருந்துவத்த பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாக மனைவி தெரிவித்தார். 

இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட தனது கணவரை, வைத்தியசாலையிலோ அல்லது சேருநுவர பொலிஸுக்கோ, தனக்கோ அறிவிக்காமல் அவரை குருந்துவத்த பொலிஸார் திருப்பி அனுப்பியது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தனது கணவர் இதற்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும், 13ஆம் திகதி காலை தன்னிடம் நன்றாகவே பேசியதாகவும் மனைவி தெரிவித்தார். 

தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தனது கணவரை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீர் மல்க அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X