Editorial / 2023 ஒக்டோபர் 20 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்,எப்.முபாரக்
திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகத்தில் எவரும் வாழக்கூடாது என கூறி குறித்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டபட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், போட்டங்காடு சந்தி , அக்ரபோதி விகாரைக்கு முன்னாள் உள்ள சிலை போன்றவற்றுடன் நான்கு சிலைகளின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தின் பேரில் கந்தளாய்,பேராறு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடை நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட இளைஞர் அனைத்து மதங்களையும் பற்றி விமர்சிப்பவர் எனவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago