2025 மே 23, வெள்ளிக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா 

திருகோணமலை, கன்னியாப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)  நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கன்னியா, 06ஆம் கட்டையைச் சேர்ந்த பலனயாண்டி கோமலதாஸ் (33 வயது ) என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

தமிழ் - சிங்கள புது வருடத்தைக் கொண்டாடுவதற்காக இருவரும் மது அருந்தியதாகவும் அவ்வேளையில் இருவருக்கிடையேயும் ஏற்பட்ட வாக்குவாதத்தினாலே இந்தக் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்திய நபர், கன்னியாப் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X