Niroshini / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை,கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை பெய்த அடைமழை காரணமாக இப்பிரதேசத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை,மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக கந்தளாய் நகரம்,பேராறு,ஆரியவங்ச மாவத்தை மற்றும் பொட்டன்காடு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகளில் மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன.
இது குறித்து கந்தளாய் பிரதேச செயலாளர் கே.பி.பிரேமதாஸ கூறுகையில்,
திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இதுவரை இருபது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அம் மக்களுக்கு நஷ்டஈடுகள் வழங்குவது பற்றி மாவட்ட செயலாளருடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் இப்பிரதேசத்திலிருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை எனவும் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை நீரினை விரைவாக வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளரிடம் பேசி முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026