2025 மே 23, வெள்ளிக்கிழமை

கந்தளாய் வர்த்தக நிலையங்களை சோதிக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கந்தளாயில் உணவுகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களைப் சோதிக்கும் நடவடிக்கைகள், இன்று வியாழக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கந்தளாய் பிரதேச சபை அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், காலாவதியான உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது தொடர்பில் சோதனை செய்யப்படவுள்ளதாக கந்தளாய் பொதுச் சுகாரதார வைத்திய  அதிகாரி டொக்டர் ருவன் திலக்க தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தின் கந்தளாய் நகரம், வான்எல, வட்டுக்கச்சி மற்றும் முள்ளிப்பொத்தானை ஆகிய பகுதிகளில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்களில் இன்று (07) முதல் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காலாவதியான இனிப்புப் பண்டங்கள் குளிர்பானங்கள் விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியான திகதி குறித்து அவதானம் செலுத்துமாறு நுகரவோரிடம், கந்தளாய் சுகாரதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீதி ஓரங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மேற்கொள்ளப்படவுள்ள இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X