2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கந்தளாய் குளக்கட்டின் புனரமைப்பு மும்முரம்

எப். முபாரக்   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் குளக்கட்டின் அடிப்பாகத்தில் நீர்க் கசிவு ஏற்பட்டதையடுத்து, கந்தளாய் குளக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது கந்தளாய் குளத்தில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதோடு, மேலதிக நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

குளக்கட்டின் நீர்க் கசிவு ஏற்பட்ட பகுதியில் ஆழமாக தோன்டி, மணல் இட்டு, கொங்கிரீட் இடப்பட்டு வருகின்றது. அத்தோடு, நீர் வழிந்தோடுவதற்கான காண்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வேலைகள், பொறியியலாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .