Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
எப். முபாரக் / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதோடு, எட்டாயிரம் ஏக்கர் அடி நீர் மாத்திரமே காணப்படுவதாக, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (4) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாரிய நீர்த்தேக்கத் திட்டமான கந்தளாய் நீர்த்தேக்கத்தில் ஒரு இலட்சத்து பதினாறு அடி வரை நீரைச் சேமித்து வைக்க முடியுமெனவும் இதன்மூலம் 22 ஆயிரம் ஏக்கர் காணிகளை நெற்செய்கை செய்ய முடியுமெனவும் தெரிவித்தார்.
ஆனால், 2018, 2019ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையின் பின்பு கந்தளாய் நீர்த்தேக்கத்தில் 78,125 ஏக்கர் அடி நீர் தான் மீதமாக இருந்ததாகவும் இந்நீரைக் கொண்டு, நீர்ப்பாசன திணைக்களத்தால் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைத் தான் வேளாண்மை செய்கை மேற்கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை கந்தளாய் பகுதியிலுள்ள 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வாறு செய்கை பண்ணப்பட்டதால் தான் தற்போது கந்தளாய் நீர்த்தேக்கத்தில் வழமைக்கு மாறாக குறைந்தளவான நீர் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர்ப்பாசன அதிகாரிகள் பரிந்துரைத்த ஏக்கர் அளவுக்கு மேலதிகமாக விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் முடிவெடுத்தமைதான் முக்கிய காரணமென, பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago