2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

Editorial   / 2021 நவம்பர் 11 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில்  பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக நான்கு வான் கதவுகள் அரை அடிக்கு இன்று (11)  திறந்து விடப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி, 14,600 ஏக்கரில் வேளாண்மை செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அனைத்து வான் கதவுகளை திறந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் பொறியலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .