Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுபோக நெற்செய்கைக்கான பசளை வகைகள், கந்தளாய் லக்பொஹர நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் நீரினைப் பயன்படுத்தி 16 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவதற்கான பசளை வகைகளே வந்தடைந்துள்ளதாக கந்தளாய் லக்கொஹர நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
யூரியா மற்றும் சேற்றுப்பசளை சல்பேற்று உட்பட வேளாண்மைக்கான பசளைகளும் வந்தடைந்துள்ளனவெனவும், கந்தளாய், வான்எல, பேராறு, ஜயந்திபுர போன்ற பகுதிகளுக்கான பசளைகளை உரிய பகுதி விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கந்தளாய் லக்பொஹர நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
57 minute ago