Janu / 2025 ஜூலை 10 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திர, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு புதன்கிழமை (9) மாலை திடீர் விஜயம் மேற்கொண்டார்.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரடியாக கண்டறிவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் என்பதுடன் இந்த விஜயத்தின் போது, கந்தளாய் தள வைத்தியசாலையின் மருந்துப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கான முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.
அடுத்த ஆண்டுக்கு தேவையான மருந்துகளை இந்த ஆண்டிலேயே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததுடன் இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மருந்துத் தட்டுப்பாட்டை முன்கூட்டியே தவிர்த்து, நோயாளிகளுக்குத் தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்
மேலும், சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார். குறிப்பாக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் ஏனைய மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை சுகாதார சேவைகளில் பெரும் சவாலாக இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விஜயத்தின் போது கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்சகர் உதார குணதிலக்க மற்றும் வைத்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
எப்.முபாரக்

4 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago