Editorial / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பிரதான வீதி 95ஆம் கட்டை சந்தியில் இன்று (08) அதிகாலை 6:20 மணியளவில் டோக்கியோ சுப்பர் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனமும் டிப்பர் லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதனால் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகன ஓட்டுநரின் இரு கால்களும் நசுங்கிப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், டிப்பர் லொறி ஓட்டுநர் சிறு காயங்களுக்குள்ளாகியதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் சிக்கிய இருவரையும் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சை இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .