Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று சிவன் கோவிலில் ஆடி அமாவாசையும் பிதுர் தர்ப்பணமும் எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.
சிவபக்தன் இராவணன் தனதுதாயாருக்கு கன்னியா வெந்நீரூற்றில் பிதுர் கடமை செய்து முடித்தான் இவ்வாறான வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீரூற்றில் இவ்வருடமும் ஆடி அமாவாசை எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை கன்னியா சிவன் ஆலயத்தில் விஷேட அபிஷேகம், பூசை வழிபாடுகள் நடைபெற்று பிதுர் தர்ப்பணம் நடைபெறும்.
அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்று வெந்நீரூற்றில் விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் சைவ அடியார்கள் கன்னியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஏமு தீர்த்தங்களில் நீராடி பிதுர்தர்ப்பணம் செய்து சிவனை வழிபட்டு இறையருளைப் பெறுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .