Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ரட்நாயக் மற்றும் உறுப்பினர் விவுசன் தலைமையிலான குழு, கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு நேற்று (07) விஜயம் மேற்கொண்டது.
வெந்நீர் ஊற்று கிணறுகளுக்கு வெளியே உள்ள பள்ளிவாசலுக்குச் செந்தமான காணியைப் பார்வையிட்டு, அக்காணியின் உறுதியை சரிபார்த்ததுடன், நீதிமன்ற தீர்ப்பாணையையும் பார்வையிட்டு, சம்மந்தப்பட்டவர்களிடம் 3 ஏக்கர் காணியை பிரதேச சபைக்கு 10 வருடங்கள் குத்தகைக்கு பெறுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர்.
கன்னியா வெந்நீர் ஊற்று வாசலில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வியாபாரத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்துக் கடைகளையும் ஓரே இடத்தில் கொண்டு வருவதற்கும் பிரதேச சபையின் வருமானத்தை பெருக்குவதற்காக வாகனத் தரிப்பிடம், கடைத்தொகுதிகள், மலசலகூடம் மற்றும் குளியலறை ஆகியனவற்றை அமைப்பது குறித்தும் ஆராயப்பட்டன.
அத்தோடு, கன்னியா வெந்நீரூற்று பகுதியை பிரதேச சபையின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களும் மற்றும் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025