2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கருமலையூற்று பள்ளிவாசல் காணியை விடுவிக்க கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்ட  கருமலையூற்று பள்ளிவாசல் காணப்படுகின்ற காணியை  உடனடியாக விடுவிக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்கள் காணப்பட்ட பிரதேச காணிகள், அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்ட கருமலையூற்று பள்ளிவாசல் காணி இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே காணப்படுவதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் கடற்படைக்குச் சொந்தமான காணி எனக் கூறப்பட்ட போதிலும் தற்போது சென்னைத் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி எனவும் கூறி, குறி பள்ளிவாயல் விடயத்தில் மாற்று திசைகளை பரப்பி வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கமும், திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளும் மிகக் கூடிய கவனம் எடுத்து, குறித்த பள்ளிவாசல் காணிரய விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .