2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கரையொதுங்கிய பாரிய சுறா

Princiya Dixci   / 2021 ஜூன் 15 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி கடற்கரையோரப் பகுதியில் பாரிய சுறா மீன் ஒன்று, நேற்று (14) மாலை கரையொதுங்கியதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய சுறா மீன், மீனவர்களால் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.

இந்த சுறா மீன்,  சுமார் 300 கிலோகிராமுக்கும் மேற்பட்ட நிறையுடன், 04 அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்கள், கடல் கொந்தளிப்புக் காரணமாக இவ்வாறு சுறா மீன் கரையொதுங்கியுள்ளதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X