2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கரையோர சேத விவரங்களை செயலாளர் பார்வையிட்டார்

தீஷான் அஹமட்   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரையோரக் கிராமங்களை, மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், நேற்று (18) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய பிரதேச செயலாளர், சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

அத்தோடு, திரட்டப்பட்ட சேத விவரங்களைக் கொண்டு, அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் செய்வதாகவும், கடல் சீற்றத்தால் ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படும் கரையோரக் கிராமங்களைப் பாதுகாக்கு வகையில், உரிய திட்டங்களை முன்னெக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கள விஜயத்தில், மூதூர் பிரதேச செயலகத்தின், அனர்த்த சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.நிறூஸும் இணைந்துகொண்டு, குறித்த பாதிப்புகளைப் பார்வையிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X