2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 03 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எஸ்.எஸ்.குமார் கதிரவன்

திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதுடன், இதுவரை 52 கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 19 ஆண்கள், 12 பெண்கள் அடங்கலாக 31 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் மரணமடைந்துள்ளனர் எனவும் 

மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை  91ஆக அதிகரித்துள்ளதாகவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் நேற்று (02) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X