Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கல்வித்துறையில் திருகோணமலை மாவட்டம்; ஏழாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்துக்கு பின்நோக்கியுள்ளதுடன், ஏனைய மாகாணங்களை விட கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் பின்னடைந்து வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
வெள்ளைமணல் நாச்சிக்குடா அல் மதினா முஸ்லிம் வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, அவ்வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில், மூன்று மாவட்டங்களிலும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் நிரப்பப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இம்மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்' என்றார்.
'மேலும், மத்திய மற்றும் மாகாண அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், பெற்றோரின்; பங்களிப்பு குறைவாக இருக்கின்றது. இன்றைய காலத்தில் பாடசாலை மாணவர்களே பல்வேறு வழிகளிலும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் அதற்குக் காரணமாக இருப்பது மடிக்கணினி, அலைபேசி, இணையத்தளத் பயன்பாடேயாகும்.
இதற்கு பெற்றோரும் காரணமாகின்றனர். பிள்ளைகளை நெறிப்படுத்தி வளர்ப்பது பாடசாலையின் அதிபரோ, ஆசிரியரோ மாத்திரம் அல்ல. பெற்றோரின் கைகளிலுமுள்ளது' என்றார்.
இந்நிகழ்வில் திருகோணமலை கல்வி வலய பொறியியலாளர் எம்.நவாஸ் மற்றும்; பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
9 minute ago
32 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
34 minute ago