2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கலாசார மண்டபத்தை புனரமைக்க கோரிக்கை

தீஷான் அஹமட்   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது சேதமாக்கப்பட்ட தோப்பூர் கலாசார மண்டபம், இன்னும் புனரமைக்கப்படாது, புற்புதர்கள் வளர்ந்து காணப்படுவதாக, தோப்பூர் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் தோப்பூர் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கலை, கலாசார நிகழ்வுகள்களை நடத்துவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டிய பிரதேச மக்கள், இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கரிசனை செலுத்தி,  தோப்பூர் கலாசார மண்டபத்தை மீளப் புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் பொது அமைப்புகளால் நடத்தப்படுகின்ற சகல நிகழ்வுகளும் பாடசாலைகளிலே நடத்தப்படுகின்றன எனவும் சில வேலைகளில் பாடசாலையில் வேறு நிகழ்வுகள் இருந்தால் பொது அமைப்புகளால் நடத்தப்படுகின்ற நிகழ்வுகளை பிற்போட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.                   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X