2025 மே 05, திங்கட்கிழமை

கல்வி முன்னேற்றம் தொடர்பில் ஆளுநருடன் அதிகாரிகள் சந்திப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் கீழ் இயங்கும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஆளுநரின் திருகோணமலையிலுள்ள அலுவலகத்தில், இன்று (09) இடம்பெற்றது.

மாதத்தில் இருமுறை சந்திப்புகளை மேற்கொண்டு, கல்வி முன்னேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில், பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலய கல்வி பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா, மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் ஆகியோர், இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X