Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற பாலர் பாடசாலைகள் அனைத்தையும், கல்வி திணைக்களங்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கையெடுக்க வேண்டுமென, பெற்றோர்களும் புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில், மொரவெவ, சேருவில, கோமரங்கடவல போன்ற பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பாலர் பாடசாலைகள், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், இங்கு கல்வி அபிவிருத்தி தொடர்பான எவ்வித ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும், கல்வித் திணைக்களங்களின் வழிகாட்டலின் கீழ் பாலர் பாடசாலைகள் இயங்குவதில்லை எனவும், சிறார்களின் ஆரம்பக்கல்வி சீர்கெட்டு வருவதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சிறார்களின் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித ஆலோசனைகளும் இன்றி, முறையற்ற விதத்தில், தாங்கள் விரும்பியவாறு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்துப் பாலர் பாடசாலைகளும் கல்வி அமைச்சின் கீழ் வரக்கூடிய விதத்தில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கிழக்கு மாகாண முன்பள்ளி பிரிவுக்குள் கொண்டுவர வேண்டுமென, உரிய அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
4 hours ago