2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

களப்பை விடுவிக்குமாறு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுபிட்டி - பெரிய கரைச்சி களப்பை விடுவிக்கக் கோரி, இன்று (25) காலை, குறித்த பிரதேச மீனவர்களால், ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், தமது கோரிக்கை அடங்கிய மகஜரொன்று, பிரதேச செயலாளருக்கு வழங்கும் முகமாக, பிரதேச செயலக நிர்வாக அதிகாரி எஸ்.கணேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

கரைச்சி பகுதியில், நீண்டகாலமாக மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைச் செய்துவந்த போதும், யுத்தம் முடிவடைந்ததும், அங்குள்ள சுமார் 1,800 ஏக்கர் காணி, உப்பு உற்பத்திக்காக, தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், அக்காணியை விடுவிக்கக் கோரி பலமுறை போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, சுமார் 1,000 ஏக்கர் காணியை விடுவிக்க, மேற்படி கம்பனி இணக்கம் வெளியிட்டிருந்ததாக, பிரதேசச் செயலாளர் பொ.தனேஸ்வரன், எழுத்துமூலம் மீனவர் சங்கத்துக்குத் தெரிவித்திருந்தார்.

எனினும், அவை இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், கரைச்சி களப்பை உடன் விடுவிக்க வேண்டுமெனக் கோரியே, இன்றைய தினம், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .