2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கவிதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி

Thipaan   / 2016 ஜூன் 20 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பசும்பால் நுகர்வைப் பிரபல்யப்படுத்துதல் எனும் கருப்பொருளில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் 1ஆம் 5ஆம் 6ஆம் இடங்களைப் பெற்ற, திருகோணமலை மூதூர் சேனையூர் மத்திய கல்லூரி மாணவிகள்,  பாடசாலையின் அதிபர் செ.சிறிதரன், ஆசிரியர்கள், பெற்றோரால், நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

கிராமிய கைத்தொழில் அமைச்சினால் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட போட்டியில், தரம் 12ல் கல்வி கற்கும்  மாணவிகளான,

செல்வி ராஜேந்திரன் நாகதீபா முதலாம் இடத்தினையும் செல்வி புஸ்பராஜன் கர்ணிசா ஜந்தாம் இடத்தினையும் செல்வி ரமேஸ்வரன் சஜிதா ஆறாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஜனாதிபதி  மைத்திரிபால சிறசேன மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வு, கடந்த புதன்கிழமை (15) பி.ப. 3.மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வியேலே இம்மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .