2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’காடழிப்பை தடுக்க தகவல் வழங்கவும்’

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், எஸ்.எம்.றனீஸ், அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் காடழிவை சிலர் ஏற்படுத்திவருவதாகவும் இதனைத் தடுக்க அனைவரும் இவ்விடயத்தோடு தொடர்பான தகவல்களை உடன் வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்  தெரிவித்தார்.

காடழிப்பை தடுத்தல் தொடர்பான விசேட கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் தலைமையில் நேற்று (24) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி, காடழிவை மேற்கொள்வோர் தொடர்பில் தகவல் வழங்க 0707011117 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் பொதுமக்கள் கரிசனையுடன் செயற்படுமாறும் இல்லையேல் சுற்றாடல் பல பாதகங்களுக்கு உட்படும் என்று இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .