எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்போபுர கிராமத்துக்குள் இன்று (06) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், மூன்று வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாகவும், பெருமதியான வீட்டுத் தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், யானை வேலிகள் சீரின்மையால் இவ்வாறான அசம்பாவிதங்கள் நிகழ்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதமும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025