2025 மே 14, புதன்கிழமை

காட்டு யானைகள் அட்டகாசம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஜூன் 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிலியடி வட்டமடுப் பகுதியில் வியாழக்கிழமை இரவு, ஆறு  யானைகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து பெரிதும் அட்டகாசம் புரிந்து குடியிருப்பு மற்றும் வீட்டுப் பொருட்களையும் துவஷம் செய்துள்ளன.

இவ் வீட்டில் குடியிருந்த தம்பதிகள், சிறு சிறு காயங்களுடன் ஓடியொழிந்து உயிர் தப்பியுள்ளனர்.

இச் சம்பவத்தில், எஸ். சாஹூல் கமீட் மற்றும் அவரது துனைவியார் ஆகியோர் இதனால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

இப் பகுதியில் ஆயிலியடி பிரதேசத்தில் 2015ஆண்டு, ரமழான் மாதத்தில் பரீட் என்பவர், யானை தாக்கி  மரணமடைந்தார்.

அதன் பிற்பாடு இப்பகுதியில், மணியரசன் குளப் பகுதியில்  கடந்த  2016, ரமழான் மதத்தில் பொக்கையன் என்பவர் மரணமடைந்தார்.

இப்பகுதியில் யானை வேலி அமைக்கும் பணிகள் இடம்பெற்றிருந்த வேலையில், அங்கு இடம்பெற்ற ஊழல் காரணமாக அப் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .